Home » » இன்றைய ராசிபலன் - 15-01-2015

இன்றைய ராசிபலன் - 15-01-2015

மேஷம்


மேஷம்: குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். வெளியூர் பயணங்கள் சிறப்பாக அமையும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.


ரிஷபம்


ரிஷபம்: குடும்பத்தினரின் உணர்வை புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.


மிதுனம்


மிதுனம்: புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத் தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுக மாவார்கள். கனவு நனவாகும் நாள்.


கடகம்


கடகம்: பழைய இனிய அனுபவங்கள் நினைவுக்கு வரும்.தாய்வழி உறவினர் களுடன் கருத்து வேறுபாடு வந்து நீங்கும். நீண்ட நாளாக பார்க்க நினைத்தவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.


சிம்மம்


சிம்மம்: குடும்பத்தில் உள்ள வர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டுஅதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர். பேச்சில் முதிர்ச்சி தெரியும். உறவினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பிறக்கும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தைரியம் கூடும் நாள்.


கன்னி


கன்னி: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். விலகி நின்ற வர்கள் விரும்பி வருவார்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.


துலாம்


துலாம்: இன்றும் ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எளிதாக முடிக்கவேண்டிய விஷயங்களை போராடி முடிப்பீர்கள். நெருங்கியவரி டம் மனக்குறையை கூறி ஆதங்கப்படுவீர். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். பொறுப்பு ணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.


விருச்சிகம்


விருச்சிகம்: குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர்கள். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். அண்டை, அயலார் சிலரின் செயல்பாடு களால் கோபம், எரிச்சல் அடையலாம். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். கடினமாக உழைத்து முன்னேறும் நாள்.

தனுசு


தனுசு: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். நம்பிக்கைக்கு உரியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் சந்தை நிலவரத்தை அறிந்து லாபம் ஈட்டுவீர்கள். இனிமையான நாள்.


மகரம்


மகரம்: உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள், செயல்படுவீர். சகோதரங்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். வி.ஐ.பிகளால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். மதிப்புக் கூடும் நாள்.


கும்பம்


கும்பம்: கணவன்,மனைவிக் குள் நெருக்கம் உண்டாகும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். நட்பு வட்டம் விரியும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.


மீனம்


மீனம்: இன்றும் சந்திராஷ்ட மம் நீடிப்பதால் உங்கள் அறியாமலேயே ஒருவித படபடப்பு வந்து செல்லும். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுதான் காரணம் என்பதை உணர்வீர்கள். வியாபாரத்தில் ஓரளவு லாபம் சம்பாதிப்பீர்கள். இடம், பொருள், ஏவலறிந்து செயல்பட வேண்டிய நாள்.