Home » » கடைவாய்ப்பல் வலிக்கான சில சிறப்பான வீட்டு சிகிச்சைகள்..!

கடைவாய்ப்பல் வலிக்கான சில சிறப்பான வீட்டு சிகிச்சைகள்..!

பொதுவாக 17-25 வயதில் தான் கடைவாய் பற்கள் தோன்றும். சில சமயம் அதற்கு மேலான வயதிலும் கூட தோன்றும். நம் வாயில் உள்ள நான்கு காற்பகுதியிலும் கடைசி அல்லது பின் பல்லாக இது இருக்கும். கடைவாய் பற்கள் தான் கடைசியாக தோன்றும் பற்களாகும்.


கடைவாய் பற்கள் கடைசியாக தோன்றுவதால், அவைகள் சரியாக வளர்வதற்கு உங்கள் வாயில் போதிய இடம் இருப்பதில்லை. பிற பற்களை தள்ளி விட்டோ அல்லது பிற பற்களுக்கு இடையே மாடிக் கொண்டோ தான் இது வளரும். ஈறுகளின் கீழ் ஒரு கோணத்தில் தான் இது வளரும். இதனால் பாதிக்கப்பட்ட கடைவாய் பல்லினால் வலி ஏற்படும், வீக்கமடையும், ஈறுகளில் எரிச்சல் உண்டாகும்.

வலியுடன் சேர்த்து சுவாச துர்நாற்றம், உணவுகளை கடிப்பதிலும் மெல்லுவதிலும் சிரமம், தலைவலி மற்றும் அருகிலுள்ள பற்களில் வலி போன்றவற்றை நீங்கள் அனுபவிக்க நேரிடலாம்.

கடைவாய் பல் எந்த ஒரு எச்சரிக்கையும் இன்றி, திடீரென தோன்றும் அல்லது மெதுவாக வளரும். அது தாங்க முடியாத வலியைக் கொடுக்கலாம். ஏன், அதனால் உங்கள் அன்றாட வேலைகள் கூட கெட்டுப் போகலாம். இந்த வலியை போக்க சில வீட்டு சிகிச்சைகள் உள்ளது. இருப்பினும், இந்த வலி மீண்டும் ஏற்பட்டால், பல் மருத்துவரை கொண்டு இந்த பல்லை பிடுங்கி எடுத்து விடுவது தான் சிறந்த வழியாக இருக்கும். சரி கடைவாய் பற்களினால் ஏற்படும் வலிகளை போக்கிடும் சில வீட்டு சிகிச்சைகளைப் பற்றி இப்போது பார்க்கலாமா...?

கிராம்பு

கடைவாய் பற்கள் மட்டுமல்லாது பிற பல் வலியை குறைக்க கிராம்பு பெரிதும் உதவுகிறது. இதில் உணர்வு இழப்பு குணமும் வலி நிவாரணி குணமும் உள்ளதால், இது வலியை மரத்து போக செய்யும். கூடுதலாக அதிலுள்ள ஆன்டி-செப்டிக் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பி குணங்கள் தொற்று ஏற்படாமல் தடுக்க உதவும்.

பயன்படுத்தும் முறை

கிராம்பு மற்றும் கிராம்பு எண்ணெய் என இரண்டையுமே பயன்படுத்தலாம். * பஞ்சுருண்டையை கொண்டு கொஞ்சம் கிராம்பு எண்ணெய்யை தொட்டு கொள்ளவும். பின் வலி ஏற்படுத்துகிற கடைவாய் பல் மற்றும் அதனை சுற்றியுள்ள ஈறுகளில் தடவவும். ஒரு நாளைக்கு 2-3 முறை செய்திடவும். கிராம்பு எண்ணெய் மிகவும் அடர்த்தியாக இருந்தால், சற்று ஆலிவ் ஈநெய் சேர்த்து அதனை நீர்த்துப் போக செய்யவும். * வலி எடுக்கும் கடைவாய் பற்களின் மேல் 2-3 முழு கிராம்பை வைத்து வாயை மூடிக் கொள்ளவும். கிராம்பு அதன் அதிமுக்கிய எண்ணெய்களை வெளியேற்ற தொடங்கியவுடன், உங்கள் வலிக்கு நிவாரணம் கிடைக்க தொடங்கும். * மற்றொரு சிகிச்சையும் உள்ளது - நசுக்கிய பூண்டு கிராம்பு 1, கொஞ்சம் உப்பு மற்றும் சிறிதளவு கிராம்பு எண்ணெய்யை கொண்டு பேஸ்ட் ஒன்றை தயார் செய்யவும். வீங்கிய ஈறுகளின் மீது அதனை பட்டையாக தடவவும். 5-10 நிமிடங்கள் வரை அப்படியே விட்டு விடுங்கள். பின் வெதுவெதுப்பான நீரை கொண்டு வாயை அலசுங்கள். இதனை தினமும் ஒரு முறை அல்லது இரண்டு முறை செய்யுங்கள்.

உப்பு

கடைவாய் பல் வலிக்கான மற்றொரு வீட்டு சிகிச்சையாக விளங்குகிறது உப்பு. ஈறுகளில் உள்ள அழற்சியை குறைக்கவும் தொற்றுக்களுக்கு எதிராக போராடி தடுக்கவும் இது உதவுகிறது.

பயன்படுத்தும் முறை

* 1 டீஸ்பூன் உப்பை வெதுவெதுப்பான நீரில் போடவும். அதனை வாயில் போட்டு, பல முறை கொப்பளிக்கவும். இது வலியையும் கிருமிகளையும் போக்கும். * உப்பையும் மிளகையும் சரிசமமான அளவில் கலந்து அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் ஒன்றை தயார் செய்து கொள்ளவும். பாதிக்கப்பட்ட பல்லின் மீது இந்த பேஸ்ட்டை தடவவும். சிறிது நேரத்திற்கு அப்படியே அமரவும். வலி போகும் வரை இந்த சிகிச்சையை தினமும் 2-3 முறை பின்பற்றவும்.

பூண்டு

பூண்டில் ஆன்டி-ஆக்ஸிடன்ட், ஆன்டி-பயாட்டிக், அழற்சி எதிர்ப்பி மற்றும் இதர மருத்துவ குணங்கள் உள்ளதால், கடைவாய் பல்லின் வலிக்கு நிவாரணம் அளிக்க உதவும். வாயில் உள்ள பாக்டீரியா தொற்றுக்களை குறைக்கவும் தடுக்கவும் செய்யும்.

பயன்படுத்தும் முறை

* நசுக்கிய பூண்டை வலியெடுக்கும் கடைவாய் பல்லின் மீது வைக்கவும். * வலியில் இருந்து நிவாரணம் பெற 1-2 பூண்டை மெல்லவும் செய்யலாம். * மாறாக, நசுக்கிய 1-2 பூண்டுடன் கொஞ்சம் கறுப்பு உப்பை கலந்து ஒரு பேஸ்ட்டாக தயார் செய்து கொள்ளுங்கள். பாதிக்கப்பட்ட இடத்தில் அதனை தடவுங்கள். சில நிமிடங்களுக்கு பிறகு அதனை துப்பி விடவும். மேற்கூறிய ஏதேனும் சிகிச்சைகளை தினமும் ஒரு முறை அல்லது இரு முறை பின்பற்றினால் வலி குறையும்.

வெங்காயம்

வெங்காயத்தில் கிருமி நாசினிகள், பாக்டீரியா எதிர்ப்பிகள் மற்றும் நுண்ணுயிர்க் கொல்லி குணங்கள் உள்ளதால், அது பல் வலிக்கு நிவாரணம் அளித்து, தொற்றுக்களை உண்டாக்கும் கிருமிகளை அளிக்கும்.

பயன்படுத்தும் முறை

* வெங்காயத் துண்டுகளை சில நிமிடங்களுக்கு வாயில் போட்டு மெல்லவும். * வீக்கமும் வலியும் இருப்பதால் மெல்ல முடியவில்லை என்றால், சின்ன வெங்காய துண்டை நேரடியாக பாதிக்கப்பட்ட பல்லின் மீது வைத்திடவும். * வலியை குறைக்க இரண்டு சிகிச்சைகளில் ஒன்றை ஒரு நாளில் பல முறை செய்திடவும்.

கொய்யா இலைகள்

பல்வலியை போக்க சிறந்த மருந்தாக செயல்படுகிறது கொய்யா இலைகள். அதில் குயர்செட்டின் எனப்படும் பையோஃபிளாவனாய்டு உள்ளது. இதில் வலி குறைவு குணங்கள் நிறைந்துள்ளது. கூடுதலாக அழற்சி எதிர்ப்பி, நுண்ணுயிர்க் கொல்லி மற்றும் வலி நிவாரணி குணங்களை இது கொண்டுள்ளது.

பயன்படுத்தும் முறை

* 1-2 கொய்யா இலைகளை மெதுவாக மெல்லுங்கள். அதன் ஜூஸ் உங்கள் வாயில் மெல்ல இறங்கும். விரைவிலேயே கடைவாய் பல்லில் ஏற்பட்டுள்ள வலி நீங்கும். * மற்றொரு வழி - 4-6 கொய்யா இலைகளை 1 கப் நீரில் 5 நிமிடங்கள் வரை கொதிக்க வையுங்கள். அந்த நீரை வடிகட்டி, அதனை ஆற விடுங்கள். பின் அதனை மவுத் வாஷாக தினமும் 2 முறை பயன்படுத்தினால் கடைவாய் பல் வலி குறையும்.

நன்றி: http://tamil.boldsky.com