Home » » பெற்றோர்கள் ஏன் காதல் திருமணத்தை எதிர்க்கிறார்கள்? அதை சரிசெய்வது எப்படி?

பெற்றோர்கள் ஏன் காதல் திருமணத்தை எதிர்க்கிறார்கள்? அதை சரிசெய்வது எப்படி?

திருமணம் என்பது நம் வாழ்க்கையில் ஒரு முக்கியமான அத்தியாயமாகும். அதனைப் பற்றி ஒவ்வொருவருக்கும் கண்டிப்பாக ஒரு கனவு இருக்கும். திருமணம் என்ற வார்த்தையைப் பற்றி நினைக்கும் போதெல்லாம், அந்த நாள் நமக்கு எப்படி இருக்க போகிறது என்ற கனவு பிம்பம் நம் முன் கண்டிப்பாக வந்து நிற்கும்.
அதனைப் பற்றி கொஞ்சமாவது கற்பனை செய்து பார்க்காமல் இருக்க முடியுமா என்ன?

அதற்கு காரணம் திருமணம் என்பது நம் அனைவருக்குமே சிறிது வயது முதல் வசீகரமான ஒரு விஷயமாக பதிந்துள்ளது. அப்படி வசீகராமாய் அமைந்துள்ள சில விஷயங்கள் - மணப்பெண் மற்றும் மணமகனின் வண்ணமயமான ஆடைகள், ஜொலித்திடும் அரங்கம், இசை, பல்வேறு சடங்குகள் மற்றும் அழகழகாய் அமர்ந்திருக்கும் உறவினர் கூட்டம்.

ஒரு ஆண் அல்லது பெண் தன் திருமணத்தைப் பற்றி கற்பனை செய்யும் போது, கண்டிப்பாக அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய நண்பர்கள், உற்றார் உறவினர் என அனைவரும் அவர்களின் நம் கண்முன் வருவார்கள். தன் பெற்றோர்கள் இல்லாமல் தன் திருமணத்தை கற்பனை செய்து பார்ப்பது கஷ்டமே. ஆனால் சில நேரங்களில் தனக்கு வரப்போகும் மருமகனை அல்லது மருமகளை உங்கள் பெற்றோர் நிராகரிக்கலாம். அதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளது. பொதுவாக பெற்றோர்கள் ஏன் திருமணத்தை எதிர்க்கிறார்கள் என்பதையும், அதை எப்படி சரி செய்வது என்பதைப் பற்றியும் கொஞ்சம் விரிவாக பார்க்கலாமா?

வெவ்வேறு பண்பாடு/ஜாதி/மதம்

ஒரே ஜாதி அல்லது மதம் அல்லது பண்பாட்டில் தான் திருமணம் நடக்க வேண்டும் என்பது பல குடும்ப அமைப்புகளின் மத்தியில் நிலவி வரும் வலுவான நம்பிக்கையாகும். தற்போதைய தலைமுறையினருக்கு இதன் மீதெல்லாம் நம்பிக்கை இல்லை

சமுதாய நெருக்கம்

சில நேரம் பெற்றோர்கள் அல்லது உடன் பிறந்தவர்கள் கூட பழமைவாதிகளாக இருப்பதில்லை; மாறாக அடுத்த நிலை உறவுகளான மாமாக்கள், அத்தைகள், தாத்தாக்கள், பாட்டிகள் போன்றவர்கள் பழமைவாதிகளாக இருக்கலாம். அவர்கள் திருமணத்தைப் பற்றி, ஜாதிகள் மற்றும் பண்பாடுகளைப் பற்றி கடுமையான கருத்துக்களை கொண்டிருக்கலாம். இதனால் குடும்ப சொந்தங்களுக்கு மரியாதை அளிப்பதா அல்லது நல்லிணக்கத்திற்கு தோல் கொடுப்பதா என குழம்பி போவார்கள் உங்கள் பெற்றோர்கள். இதுவே உங்கள் திருமணத்திற்கு தடையாக இருக்கும்.

முன்னதாக ஏற்பட்ட கெட்ட அனுபவம்

சில நேரங்களில் கலப்பு திருமணங்களையும், ஜாதி விட்டு ஜாதி மாறி செய்யும் திருமணங்களையும் பெற்றோர்கள் ஏற்றிருக்கின்றனர். ஆனால் ஏதோ சில காரணங்களால் அந்த திருமணங்கள் தோல்வியில் முடிந்தால், குடும்பங்கள் இதற்கு எதிராக மாறி விடுகின்றனர்.

தோற்றத்தின் அடிப்படையில் விருப்பமின்மை

தங்கள் மகன் அல்லது மகளுக்கு வரப்போகும் வாழ்க்கைத்துணை இப்படி தான் இருக்க வேண்டும் என பெற்றோர்கள் மனக்கோட்டை கட்டி வைத்திருப்பார்கள். இந்த காரணத்திற்காக திருமணத்தை நிராகரிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது தான். ஆனாலும் சில நேரங்களில் இதை பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால் பிடிக்கவில்லை என்றால் உணர்ச்சி ரீதியாக பணிய வைத்து திருமணத்தை நிராகரிப்பார்கள்.

பெற்றோர் சம்மதம் இல்லாமல் திருமணங்கள் தோல்வி அடைவதற்கான காரணங்கள்

குடும்ப உறுப்பினர்களின் ஒப்புதல் அளிக்காத காரணத்தினால் மட்டும் அனைத்து திருமணங்களும் தோல்வியடைவதில்லை. கணவன் மனைவிக்கு இடையே உள்ள சம்பந்தமே திருமணம். ஒரு வேளை இருவருக்கும் இடையே புரிதல் இல்லையென்றால், அவர்களுக்கு இடையேயான பந்தம் முறியத் தொடங்கும். இப்படி தோல்வியில் முடிவதற்கு அனைவரும் கூறும் ஒரே காரணம் - பெரியவர்களின் சம்மதம் இல்லாமல் நடந்ததால் தான் திருமணம் உடைந்தது. ஆனால் பெரியவர்களின் ஒப்புதல் இல்லாமல் போகும் காரணம் தவிர, கீழ்கூறிய சில காரணங்களாலும் திருமணம் உடைகிறது:

குற்ற உணர்வு

சிலர் வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொள்வார்கள். ஆனால் நாளடைவில் அவர்களுக்குள் குற்ற உணர்வு உண்டாகும். இந்த உணர்ச்சி அதிகரிக்கும் போது, தன் துணையின் மீது உரையாடல் வாயிலாக அல்லது செயல்களின் வாயிலாக எதிர்மறையான விதத்தில் நடக்க தொடங்குவார்கள். இதனால் துணையின் மனதில் ஒருவித வெறுப்பு ஏற்படும்.

சுய சந்தேகம்

பல முறை நாம் முடிவுகள் எடுத்தாலும் கூட, இந்த உலகம் நம் முடிவுகளால் எதிர்மறை விளைவுகளைத் தான் கணிக்கும். இதனால் நாளடைவில் நம் மீது நமக்கே சந்தேகம் ஏற்பட்டுவிடும். இதனால் சில எதிர்மறை செயல்களில் ஈடுபட்டு அதனால் சண்டைகள் ஏற்படும்.

திருமணம் மற்றும் வாழ்க்கை துணையிடம் அதிகமான எதிர்ப்பார்ப்பு

தங்கள் உண்மையான குணத்தை வெளிக்காட்டாமல் தன் வாழ்க்கை துணைக்காக எந்த சமரசத்தை செய்யும் ஒருவர், திருமணத்திற்கு பிறகு தன் சுய ரூபத்தை காட்டுவார். சுயநலமடைந்து தன் துணையிடம் யதார்த்தமற்ற செயல்களை எதிர்ப்பார்ப்பார். இதனால் தங்கள் வாழ்க்கை துணை எப்போதுமே கூடுதல் பொறுப்பைப் பற்றி நினைவில் வைத்துக் கொண்டே இருக்க வேண்டும். ஒரு கட்டத்தில் அவர்கள் வெறுத்தே போய் விடுவார்கள்.

திருமணத்திற்கு பிறகு குடும்பத்தை சமாதானம் செய்ய வேண்டும்

பல நேரங்களில், குடும்பத்தாரின் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்பவர்கள், திருமணத்திற்கு பிறகு குடும்பத்துடன் இணைய மீண்டும் விருப்பப்படுவார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில், தங்கள் குடும்பத்துடன் ஒத்துப்போக தங்கள் வாழ்க்கை துணையின் மீது அழுத்தத்தை போடுவார். இதனால் அவர்களுக்கு இடையே பிரச்சனைகள் எழலாம்.

திருமணத்திற்கு பிறகு குடும்பத்தாரின் பழி வாங்கும் படலம்

சில நேரங்களில் குடும்பத்தார் திடீரென்று திருமணத்திற்கு ஒத்துக் கொள்வார்கள். ஆனால் குறிப்பிட்ட சில காலத்திற்கு பிறகு, பழைய கணக்கை தீர்க்க தங்களின் சுயரூபத்தைக் காட்ட தொடங்குவார்கள். இதனால் கூட கணவன் மனைவிக்கு இடையே பிரிவு ஏற்படலாம்.

பொறுமை

திருமணத்திற்கு அவசரப்படாமல் இருப்பது முக்கியமாகும். திருமணம் என்பது வாழ்நாள் முடிவாகும். அவசரப்பட்டு எடுக்கும் முடிவுகள் துன்பத்தில் முடியும். இரண்டு பேருக்கும் உள்ள காதல் மற்றும் இரு வீட்டாரின் பிரச்சனைகளை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். எந்த ஒரு சூழ்நிலையாக இருந்தாலும் சரி, குடும்பத்தின் வலுவான தூணாக இருப்பது காதலும் குழந்தைகளின் நல்வாழ்வே.

மூல காரணத்தை தேடுங்கள்

குடும்பத்தாரின் நிராகரிப்புக்கு எதிர்த்து செயல்படுவது நல்லதல்ல. போதிய விழிப்புணர்வு இல்லாததால் உங்கள் குடும்பத்தாருக்கு சில குறைகள் தெரியலாம். ஆனால் அதற்காக அவர்களை எதிர்த்து செயல்பட்டு அவர்களை காயப்படுத்துவது உங்கள் முதிர்ச்சியடையாமையை வெளிக்காட்டும். மூல காரணத்தையும், குடும்ப உறுப்பினர்களின் பார்வையையும் புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும். உங்கள் பெற்றோர்களிடம் பொறுமையாக பேசி புரிய வைத்தால், அவர்கள் மனது மாற கூட சந்தர்ப்பம் உள்ளது.

குறிப்பு:

உங்கள் காதலை பெற்றோர்கள் ஒப்புக் கொள்ளவில்லை என்றால் உடனே காதலிப்பவரை விட்டு சென்றுவிடாதீர்கள். பெற்றோர்களுடன் போராடி, அவர்களுக்கு உங்கள் காதலைப் புரிய வையுங்கள். ஒன்று சேர்ந்தால் தான் உண்மையான காதல் என்றெல்லாம் இல்லை, ஒன்று சேராவிட்டாலும் என் மனதில் உன் நினைவுகள் எப்போதும் இருக்கும் என்று வசனங்களை பேசி உங்கள் வாழ்க்கையை பாழ்படுத்துவதை விட்டு, மனதார காதலித்தவருடன் ஒன்று சேர முயற்சியுங்கள். உங்கள் காதல் உண்மை என்றால் பெற்றோர்களுடன் போராடி வெற்றி காணுங்கள்...

நன்றி:http://tamil.boldsky.com