Home » » தொப்பையை குறைக்க மிகவும் எளிமையான வழிமுறைகள்...!

தொப்பையை குறைக்க மிகவும் எளிமையான வழிமுறைகள்...!

மாடிப்படி ஏறி இறங்குவது,காலையில் வாக்கிங் என எதைச் செய்தாலும் எடை அவ்வளவு சீக்கிரம் குறைவது இல்லை. சில எளிமையான உடற்பயிற்சிகளைத் தொடர்ந்து செய்வதன் மூலம், பழைய அழகான உடலைத் திரும்பப் பெற முடியும்.

தரையில் மல்லாக்கப் படுக்க வேண்டும். இடுப்புப் பகுதி தரையில் படாதபடி, காலை மடக்கித் தரையில் பதிக்கவும். கைகள் உடலுக்குப் பக்கவாட்டில் இருக்கட்டும். இந்த நிலையில் இருந்து, வலது காலை மேலே நீட்டி, தரையில் இருந்து இரண்டு அடி உயர்த்தவும்.

இதே நிலையில், எவ்வளவு நேரம் இருக்க முடிகிறதோ, அவ்வளவு நேரம் இருந்துவிட்டு, பழைய நிலைக்குத் திரும்பவும். இதேபோல், இடது காலுக்குச் செய்யவும். கொஞ்சம் கொஞ்சமாக காலை உயர்த்தும் பயிற்சி நேரத்தை அதிகரித்து கொண்டே வர வேண்டும். இதனை தொடர்ந்து ஒரு மாதம் செய்துவந்தால் நல்ல முன்னேற்றம் தெரிவதை காணலாம்.

வயிற்றுப் பகுதியில் இருக்கும் தேவையற்ற சதை குறையும். முதுகுத்தண்டு வலுவாகும்.இந்த பயிற்சி ஆரம்பத்தில் சற்று கடினமாக இருக்கும். தொடர்ந்தால் பலன் கண்டிப்பாக கிடைக்கும்.

நன்றி http://www.maalaimalar.com