Home » » ஃப்ரிட்ஜில் இந்த பொருட்களையெல்லாம் வைக்கக்கூடாதா....?

ஃப்ரிட்ஜில் இந்த பொருட்களையெல்லாம் வைக்கக்கூடாதா....?

நவீன உலகில் அனைவரும் கடைக்கு மளிகை சாமான்கள் மற்றும் காய்கறி, பழங்கள் ஷாப்பிங் செய்துவிட்டு வீட்டிற்கு வந்ததும், அந்த பொருட்கள் பாழாமல் இருக்க ஃப்ரிட்ஜில் வைப்பார்கள்.

அனைவரது வீட்டிலும் மிக்ஸி, கிரைண்டர் போல ஃப்ரிட்ஜ் உள்ளது. இப்படி ஃப்ரிட்ஜ் உள்ள வீடுகளில் பார்த்தால், அனைத்து பொருட்களும் ஃப்ரிட்ஜில் தான் இருக்கும்.

நீங்கள் அப்படி செய்பவராயின் இக்கட்டுரை உங்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். ஏனெனில் இக்கட்ரையில் ஃப்ரிட்ஜில் எந்த பொருட்களையெல்லாம் வைக்கக்கூடாது என்றும், அப்படி வைத்தால் என்ன ஆகும் என்றும் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்துப் பார்க்கவும்.

உங்களுக்கு தக்காளி வேகமாக பழுக்க வேண்டுமானால், அதனை ஃப்ரிட்ஜில் வையுங்கள். ஆனால் ஏற்கனவே பழுத்த தக்காளியை ஃப்ரிட்ஜில் வைத்தால், தக்காளி விரைவில் பாழாகும். எனவே தக்காளி நீண்ட நாட்கள் வர வேண்டுமாயின், வெளியே வைத்து பராமரியுங்கள்.

பட்டர் ஃபுரூட் என்னும் வெண்ணெய் பழத்தை பச்சையாக இருக்கும் போது எப்போதுமே ஃப்ரிட்ஜில் வைக்கக்கூடாது. வேண்டுமெனில் நன்கு கனிந்த வெண்ணெய் பழத்தை குளிர் வெப்பநிலையில் பராமரிக்கலாம்.

பலரும் பிரட்டை ஃப்ரிட்ஜில் வைத்தால் தான் நன்றாக இருக்கும் என்று நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் பிரட்டை நன்கு கவர் சுற்றி, வெளியே வைத்தால் தான் பூஞ்சைகள் படர்வதைத் தடுக்கலாம்.

எக்காரணம் கொண்டும் காபித் தூளை ஃப்ரிட்ஜில் வைக்கக்கூடாது. அப்படி வைத்தால், குளிர் வெப்பநிலையால் காபி தூளின் சுவை மாறிவிடும். எனவே காபித் தூளை எப்போதும் காற்றுப்புகாத டப்பாவில் போட்டு அறை வெப்பநிலையிலேயே வைத்துப் பராமரிக்க வேண்டும்.

உருளைக்கிழங்கை எப்போதும் ஃப்ரிட்ஜில் வைக்கக்கூடாது. அவற்றை எப்போதுமே வறட்சியான இடத்தில் வைத்து பராமரிக்க வேண்டும்.

வெங்காயம் எப்போதுமே ஈரப்பசை இல்லாத மற்றும் நல்ல காற்றோட்டம் உள்ள இடத்தில் வைத்து தான் பராமரிக்க வேண்டும்..

தேனை ஃப்ரிட்ஜில் வைத்தால், அது கெட்டியாகவும், கடினமாகவும், திரித்திரியாகவும் தான் வரும். மேலும் ஃப்ரிட்ஜில் வைத்தால், தேனில் உள்ள அனைத்து ஊட்டச்சத்துக்களும் நீங்கிவிடும்.

பூண்டை ஃப்ரிட்ஜில் வைத்தால், அதில் உள்ள நறுமணம் குறைந்துவிடுவதோடு, குளிர் வெப்பநிலை பூண்டில் பூஞ்சைகள் உருவாக வழிவகுக்கும்.

நன்றி http://tamil.boldsky.com