Home » » தினமும் டீ குடித்து வந்தால் உடல் எடையை குறையும்...!அப்படி என்ன டீ...?

தினமும் டீ குடித்து வந்தால் உடல் எடையை குறையும்...!அப்படி என்ன டீ...?

இந்த டீ தினமும் அருந்துவதால் உடலுக்கு நன்மை ஏற்படுவதுடன் செலவை
யும் குறைக்கலாம்.

கொத்தமல்லித் தழையைச் சிறிதளவு நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி சுக்குத்தூள், வெல்லம் கலந்து பருகவேண்டும். காய்ந்த தனியாவையும் தூளாக்கி அதை கொண்டும் டீ தயாரித்து குடிக்கலாம். இதை தினமும் குடித்து வந்தால் உடலில் உள்ள ஊளைச்சதை குறையும்.

காம்பு நீக்கிய ஆவாரம்பூக்களை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சை பழச்சாறு, வெல்லம் கலந்து வாரம் ஒரு முறை சாப்பிடலாம். இது உடலின் வெப்பத்தை தணிக்கும்.

ஒற்றை செம்பருத்திப் பூக்களின் இதழ்களை மட்டும் பிரித்தெடுத்து நீரில் போட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சைப் பழச்சாறு, வெல்லம் கலந்து டீயாகச் சுவைக்கலாம்.

சில துளசி இலைகளை நீரில் கொதிக்க வைத்து வெல்லம், ஏலக்காய் சேர்த்தால் துளசி இலை டீ ரெடி. இது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும். புத்துணர்ச்சியையும் அளிக்கும்.

புதினா இலைகளை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சைப் பழச்சாறு, வெல்லம் சேர்த்து குடிக்கலாம். உடல் எடையை குறைக்கும் இந்த டீ மனதிற்கு புத்துணர்ச்சியையும் தரும்

[டீ வாசம் வேண்டும் என்றால் சிறிது டீ துளை சேர்த்துக் கொள்ளலாம். கருப்பட்டி, பனைவெல்லம், நாட்டுச்சக்கரை சேர்ப்பது தான் மிக நல்லது]

நன்றி http://www.maalaimalar.com