Home » » உங்கள் கண்களில் உள்ள கருவளையங்களை எப்படி போக்கலாம்....?இதோ சில இயற்கை டிப்ஸ்...

உங்கள் கண்களில் உள்ள கருவளையங்களை எப்படி போக்கலாம்....?இதோ சில இயற்கை டிப்ஸ்...

நாம் அலுவலகத்தில் வேலை அதிகம் உள்ளது என்று அதை முடிப்பதற்காக பலரும் நீண்ட நேரம் செலவழிப்போம். சில சமயங்களில் இரவில் கூட விழிந்திருந்து வேலை செய்வோம். இதனால் சரியான தூக்கம் இல்லாமல், கண்கள் உள்ளே சென்று காணப்படுவதோடு, கருவளையங்களும் தோன்றி விடும்.


இப்படி வாரம் முழுவதும் சரியாக தூங்காமல் வந்துள்ள கருவளையங்களை அன்றாடம் ஒருசில பொருட்களைக் கொண்டு மசாஜ் செய்து ஊற வைப்பதன் மூலம் போக்கலாம். அதிலும் கீழே கொடுக்கப்பட்டுள்ளதை பின்பற்றினால் விரைவில் போக்குவதோடு, கண்களும் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.


அதுமட்டுமின்றி, இந்த பொருட்களை அப்படியே முகத்தில் தடவினால் முகத்தில் உள்ள கருமை நீங்கி, முகமும் பொலிவோடு காணப்படும்.


ஆப்பிள்ளை சிறிய துண்டுகலாக வெட்டி அரைத்து, அதில் சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, கண்களைச் சுற்றி தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி வாரம் ஒரு முறை செய்து வந்தாலே கருவளையங்களைப் போக்கலாம்.


அழகு நிலையங்களில் ஏன் ஃபேஷியல் செய்தால் கண்களில் வெள்ளரிக்காய் வைக்கின்றனர் என்று தெரியுமா? ஏனெனில் வெள்ளரிக்காய் கண்களைச் சுற்றியுள்ள கருமைகளை நீக்கி, கண்களை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும் என்பதால் தான். எனவே தினமும் 10 நிமிடம் கண்களின் மேல் வெள்ளரிக்காய் துண்டுகளை வைத்து வாருங்கள். இதனால் நிச்சயம் கருவளையங்களைப் போக்கலாம்.


மஞ்சள் தூளில் உள்ள நோயெதிர்ப்பு தன்மையினால், கருவளையங்கள் விரைவில் போய்விடும். அதற்கு மஞ்சள் தூளை அன்னாசிப் பழச்சாறு சேர்த்து பேஸ்ட் செய்து, கண்களைச் சுற்றி தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.