Home » » வயிற்றுப் பகுதில் உள்ள கொழுப்பைக் கரைக்கப் பயிற்சிகள்...!

வயிற்றுப் பகுதில் உள்ள கொழுப்பைக் கரைக்கப் பயிற்சிகள்...!

ஆண்களுக்கும்,பெண்களுக்கும் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் உடல் எடை அதிகரிப்பதுடன் வயிற்று பகுதியில் அதிகளவு சதை போடுகிறது. இதற்கு முக்கிய காரணம் சரியாக உடற்பயிற்சி இல்லாதது. மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறை.

வீட்டில் தினமும் 20 நிமிடம் செய்தால் போதுமானது. இந்த பயிற்சி செய்ய தரையில் மல்லாந்து படுத்து, கால் முட்டியை மடித்து, பாதத்தைத் தரையில் பதிக்க வேண்டும். கைகளை இடுபுக்கடில் ஒட்டியபடி வைக்கவேண்டும்.

இப்போது, தலை, மார்பகப் பகுதியை முன்னோக்கி நகர்த்தி, தலை உயர்த்தி, கால்களை தொடுவது போல் கொண்டுவந்து, பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இதேபோல், ஆரம்பத்தில் 15 முறைகள் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து கொள்ள வேண்டும்.

அதிகளவு தொப்பை இருப்பவர்கள் இந்த பயிற்சியை செய்ய ஆரம்பத்தில் சற்று கடினமாக இருக்கும். வயிற்றுப் பகுதி அழுத்தப்படுவதால், கொழுப்பு கரைந்து, ஃபிட்டான வயிற்றுப் பகுதி கிடைக்கும்.