Home » » பிரெட் பிரியாணி

பிரெட் பிரியாணி


தேவையான பொருட்கள் ;

பிரெட் - 6 ஸ்லைஸ்,
பிரிஞ்சி இலை - 1,
பட்டை - சிறிய துண்டு,
லவங்கம் - 4,
ஏலக்காய் - 1,
பாஸ்மதி அரிசி - 1 ஆழாக்கு,
வெங்காயம் - 2,
பச்சை மிளகாய் - 1,
தக்காளி - 2,
இஞ்சி-பூண்டு விழுது - சிறிது,
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்,
தனியா தூள் - 1 டீஸ்பூன்,
புதினா, கொத்தமல்லி - சிறிதளவு,
எண்ணெய், நெய் - தேவைக்கு.

செய்முறை ;

குக்கரில் சிறிது எண்ணெய், நெய் ஊற்றி அதில் பட்டை, ஏலக்காய், பிரிஞ்சி இலை, லவங்கம் போட்டு வதக்கவும். பிறகு வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி-பூண்டு விழுதைச் சேர்த்து வதக்கவும்.

மிளகாய் தூள், தனியா தூள், புதினா சேர்க்கவும். பின்னர்  பாஸ்மதி அரிசி சேர்த்து, தேவையான தண்ணீர் விட்டு 2 விசில் வரும் வரை வேக வைக்கவும். வெந்ததும் இறக்கி வைத்து பொரித்த பிரெட் துண்டுகளை சேர்த்துக் கிளறி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.