Home » » இளம் வயதிலேயே உடல் பருமன் மாரடைப்பு, மூச்சுத் திணறல் நோய்கள்ளை ஏற்படுத்தும்மா...?

இளம் வயதிலேயே உடல் பருமன் மாரடைப்பு, மூச்சுத் திணறல் நோய்கள்ளை ஏற்படுத்தும்மா...?

இளம் வயதிலேயே உடல் பருமன், சர்க்கரை நோய், ரத்த அழுத்த நோய், இதய நோய், பக்கவாதம் என்று நோய்கள் வந்து அவதிப்படுகிறோம்.உலக சுகாதார நிறுவனம் 2007ம் ஆண்டு எடுத்த புள்ளிவிவரப்படி இந்தியாவில் 4 கோடி பேருக்கு உடல் பருமன் இருக்கிறது. இந்த எண்ணிக்கை 2030ல் இரண்டு மடங்காக அதிகரித்துவிடும் என்று அந்த நிறுவனம் எச்சரித்துள்ளது.

இன்றைய இயந்திரகதியிலான வாழ்க்கைச் சூழலில் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, உழைக்கும் வயதில் உள்ளவர்களுக்கும் உடல் உழைப்பு குறைந்துவிட்டது. நம் உணவுக் கலாசாரமும் மாறிவிட்டது. ஆரோக்கியமான இந்திய பாரம்பரிய உணவுமுறையை மறந்துவிட்டோம்.  பதப்படுத்தப்பட்ட உணவுகள், செயற்கை நிற உணவுகள், ரெடிமேட் உணவுகள் என்று மேற்கத்திய உணவுகளுக்கு மயங்கிவிட்டோம்.

இந்தியர்கள் பலருக்கும் உடல் எடை சரியாக இருந்தாலும், தொந்தி இருக்கும். இப்படி தொந்தி இருப்பதையும் உடல் பருமன் என்றுதான் கூறுகிறார்கள். வயிற்றுப் பகுதியில் சேரும் கொழுப்பை *ஆப்பிள் மாடல்’ என்றும், இடுப்பிலும் பிட்டத்திலும் கொழுப்பு சேருவதை *பேரிக்காய் மாடல்’ என்றும் கூறுகிறார்கள். இரண்டுமே மோசம்தான் என்றாலும்,ஆப்பிள் மாடல் உள்ளவர்களுக்கு இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பு அதிகம் என்பதால், அவர்கள்தான் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

ஒருவரின் உடல் எடை சரியாக இருக்கிறதா, இல்லையா என்று சர்டிஃபிகேட் தருவது *பாடி மாஸ் இண்டெக்ஸ்’ (BMI ). இதை எப்படித் தெரிந்துகொள்வது? உங்கள் எடையை கிலோகிராமிலும் உயரத்தை மீட்டரிலும் அளந்து கொள்ளுங்கள். உயரத்தின் அளவை அதே அளவால் பெருக்கிக் கொள்ளுங்கள். உடல் எடையை இந்த அளவால் வகுத்துக் கிடைக்கும் விடை, உங்கள் பி.எம்.ஐ.  இது 18.5 க்குக் கீழே இருந்தால், உடல் எடை குறைவு அல்லது ஊட்டச்சத்துக் குறைவு என்று அர்த்தம். 18.5 முதல் 23.9க்குள் இருந்தால், சரியான உடல் எடை.  24 - 29.9 அதிக உடல் எடை . 30க்கு மேல் என்றால் உடல் பருமன். இது 40ஐக் கடந்துவிட்டால், ஆபத்தான உடல் பருமன் என்று அர்த்தம்

ஆண்களுக்கு சரியான இடுப்பு சுற்றளவு 88 செ.மீ. பெண்களுக்கு இந்த அளவு 80 செ.மீ. இந்த அளவுக்கு மேல் அதிகமாக இருப்பவர்களையும் உடல் பருமன் உள்ளவர்களாகவே கருத வேண்டும்.எனவே உடல் பருமன் உள்ளவர்கள் உடல்லில் சேரும் கொழுப்பை குறைப்பது மிகவும் நல்லது.

உடல் பருமன் காரணமாக உடலில் ஏற்படும் பாதிப்புகளில் முக்கியமானவை: சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, மூச்சுத் திணறல், முழங்கால் மூட்டுவலி, முதுகு வலி  மற்றும் தோள் வலி, மார்பகப் புற்றுநோய், குடல் புற்றுநோய், பித்தப்பை நோய்கள், குடல் இறக்கம், மலச்சிக்கல், மலட்டுத்தன்மை.