Home » » மலையாள பெண்களின் அழகின் ரகசியம் என்ன...?

மலையாள பெண்களின் அழகின் ரகசியம் என்ன...?

மலையாள பெண்கள் என்றாலே நீளமான கருமையான கூந்தல், அழகான கண்கள், மென்மையான மற்றும் பொலிவான சருமம் தான். அதுமட்டுமின்றி நன்கு கொழுகொழுவென்று இருக்கும் அவர்களின் கன்னங்கள் தான் அனைவருக்கும் நினைவில் வரும். இதற்கு அவர்களின் அழகு பராமரிப்பு தான் காரணம்.

மேலும், இவர்கள் எக்காரணம் கொண்டும் கண்ட கண்ட க்ரீம்களைப் பயன்படுத்தமாட்டார்கள். எதற்கும் இயற்கைப் பொருட்களையே நாடுவார்கள். அதனால் தான் அவர்களின் முகத்தில் எந்த ஒரு பருக்களும் இல்லாமல் பளிச்சென்று உள்ளது. சரி, அவர்கள் அப்படி என்ன பராமரிப்புக்களை மேற்கொள்கிறார்கள்.

கேரளத்து பெண்களின் சரும மென்மையாக இருப்பதற்கு, அவர்கள் மஞ்சள் பயன்படுத்துவது தான். தினமும் குளிக்கும் போது மஞ்சளை உடல் முழுவதும் பூசிக் குளிப்பார்கள்.

கேரளத்து பெண்கள் தினமும் தங்கள் தலைக்கு தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவார்கள். அதிலும் தினமும் தேங்காய் எண்ணெயை தலையில் வைத்து, ஷாம்பு போடாமல் வெறும் தலைக்கு குளிப்பார்கள். இதனால் அவர்களின் முடி பட்டுப்போன்று பொலிவாக இருக்கிறது.

மலையாள பெண்கள் கடலை மாவு கொண்டு வாரம் ஒருமுறையாவது முகத்திற்கு போடுவார்கள். அதுவும் கடலை மாவை ரோஸ் வாட்டர் பயன்படுத்தி பேஸ்ட் செய்து பயன்படுத்துவார்கள். இதுவும் அவர்களின் சருமம் பிரச்சனையின்றி இருப்பதற்கு காரணம்.

கேரளத்து பெண்களின் நீளமான கூந்தலின் முக்கியமான ரகசியம் இவர்கள் தங்களின் கூந்தலுக்கு ஷாம்புவிற்கு பதிலாக, செம்பருத்திப் பூ மற்றும் அதன் இலையை அரைத்து, அவற்றைக் கொண்டு கூந்தலை அலசுவார்கள். மலையாள பெண்கள் ஷாம்புவிற்கு பதிலாக செம்பருத்தியைப் போல், சீகைக்காயை அரைத்து பயன்படுத்துவார்கள்.

கேரளத்து பெண்கள் தினமும் இரவில் படுக்கும் போது, சிவப்பு சந்தனக்கட்டையை நீர் பயன்படுத்தி தேய்த்து, முகத்தில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவுவார்கள். இதனால் தான் அவர்களின் முகம் கொழுகொழுவென்று அழகாக உள்ளது.

கேரளத்து பெண்கள் பொடுகு வராமல் இருப்பதற்கு, இரவில் படுக்கும் போது ஒரு கையளவு கறிவேப்பிலையை நீரில் ஊற வைத்து, அந்த நீரைக் கொண்டு மறுநாள் காலையில் தங்களின் தலையை அலசுவார்கள்.