Home » » தங்கள் அழகை அதிகரிக்க வெஜிடேரியனாக மாறிய பிரபலங்கள்...!

தங்கள் அழகை அதிகரிக்க வெஜிடேரியனாக மாறிய பிரபலங்கள்...!


வெஜிடேரியனாக இருப்பதில் என்ன நிறை இருக்கிறது என்று கேட்பவரா நீங்கள்? உங்களுக்கு தெரியுமா, நீங்கள் வெஜிடேரியனாக இருந்தால், உடலில் கொலஸ்ட்ரால், இதய பாதிப்பு, உயர் அழுத்தம் போன்றவை குறையும். மற்றும் நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கலாம்.

உடல் எடை அதிகரிக்காமல் பாதுகாக்க வெஜ் டயட் உதவுகிறது. மேலும் சிறுநீரகங்களில் கற்கள் உருவாகாமல் இருக்க வெஜ் டயட் பயனளிக்கிறது. இதுப் போல நிறைய பயன்களை தருகிறது வெஜ்., உணவுகள். சிவப்பு இறைச்சி உணவுகள் உங்கள் இதயத்திற்கு மிகவும் தீங்கானது என்று மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.

துப்பாக்கி வில்லன் வித்யூத் ஜமால் காட்டுத்தனமான உடல்கட்டை வைத்திருந்தாலும் இவர் ஓர் வெஜிடேரியன். ஏறத்தாழ 14 வருடங்களாக இவர் வெஜிடேரியனாக திகழ்ந்து வருகிறார்.

வித்யூத் ஜமால் உறவில் இருந்த போது தான் கரீனாவும் வெஜிடேரியனாக மாறினாராம். அதை இப்போதும் கடைப்பிடித்து வருகிறார் கரீனா. உடல் ரீதியாக இது புத்துணர்ச்சியாக உணர வைக்கிறதாம்.

தான் விரும்பி உண்ணும் மீன், சிக்கன், முட்டை என அனைத்தையும் விட்டுவிட்டு, வெஜிடேரியனாக மாறிவிட்டாராம் ஆமிர்கான். மற்றும் இது இவரது உடல்நிலையை நன்கு உணர செய்ததாம். இவரது மனைவி காண்பித்த காணொளியில் 15 விதமான நோய்கள் "நான் வெஜ்" சாப்பிடுவதால் ஏற்படுகிறது என்பது தான் இதற்கு காரணமாம்.

"பீட்டா" இவரை மூன்று முரை ஹாட்டஸ்ட் வெஜ் பிரபலம் என்று தேர்வு செய்துள்ளது. கடந்து சில பல வருடங்களாக தான் அமிதாப்பச்சன் வெஜிடேரியனாக இருந்து வருகிறார்.

தாம் தூம் நாயகி கங்கனா ரனாவத் வெஜிடேரியனாக மாறிய பிறகு தன்னுள் நேர்மறை எண்ணங்கள் அதிகரித்துள்ளன என்று கூறியுள்ளார்.

பாலிவுட்டின் ஹாட்டஸ்ட் நடிகையான மல்லிகா, ஜாக்கிக்கே ஜாக்கியாக இருந்தவர். இவர் முழுமையான வெஜிடேரியன் மற்றும் தனக்கு வரப்போகும் கணவரும் கூட வெஜிடேரியனாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்.