Home » » நம் உடல் ஆரோக்கியத்திற்கு உலை வைக்கும் அன்றாட உணவுகள்...!

நம் உடல் ஆரோக்கியத்திற்கு உலை வைக்கும் அன்றாட உணவுகள்...!
வாழும் நாட்கள் சந்தோஷமாக இருக்க வேண்டுமெனில், அதற்கு நாம் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம். உடல் ஆரோக்கியமாக நோயின்றி இருக்க வேண்டுமென்றால், அன்றாடம் உடலுக்கு வேண்டிய போதிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்கச் செய்வதோடு, உடற்பயிற்சியும் செய்ய வேண்டும்.

ஆனால் தற்போதைய நவீன காலத்தில் எங்கும் ஜங்க் உணவுகள் ஆக்கிரமித்துள்ளதால், ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டு, உடலைத் தாக்கும் நோய்களை எதிர்த்துப் போராடும் அளவில் சக்தி இல்லாமல் உடல் பலவீமடைகிறது.

அதுமட்டுமின்றி, இப்படி நம் உடல் பலவீனமடைவதற்கு, நாம் மேற்கொள்ளும் ஒருசில செயல்களும் காரணம். அது என்னவென்று தெரிந்து கொண்டு, அவற்றைப் பின்பற்றுவதை நிறுத்தினால், நிச்சயம் உடலைப் பாதுகாக்கலாம்.

பெரும்பாலான மக்கள் புத்துணர்ச்சி பெறுவதற்கு சோடா பானங்களைக் குடிப்பார்கள். இப்படி தினமும் சோடா பானங்களை குடித்து வந்தால், அதனால் நீரிழிவு, ஞாபக மறதி மற்றும் உடல் பருமன் போன்ற பக்க விளைவுகளை சந்திக்கக்கூடும். சோடாக்களில் உள்ள காராமல் என்னம் நிறமூட்டி புற்றுநோய்களையும், பாஸ்பேட்டுகள் முதுமையை அதிகரிக்கும் மற்றும் சோடாவில் உள்ள ஹார்மோன்களில் மாற்றங்களை ஏற்படுத்தும்.

குளோரின் கலந்த நீரைக் குடிப்பதால் அல்லது குளிப்பதால், உங்கள் உடல் பாதிக்கப்படுகிறது என்று தெரியுமா? நீரில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை அழிப்பதற்காகத் தான் குளோரின் சேர்க்கப்படுகிறது. ஆனால் அந்த குளோரின் கலந்த நீரைக் குடிப்பதால், வயிற்றில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் அழிவிற்கு உள்ளாகி, நோயெதிர்ப்பு சக்தி குறைந்து, ஆஸ்துமா, நீரிழிவு மற்றம் ஆட்டிசம் போன்ற நோய்கள் தூண்டப்படுகிறது. எனவே கவனமாக இருங்கள்.

தற்போது வீடு, அலுவலகம் என்று எங்கும் வை-பை தொழில்நுட்பம் உள்ளது. என்ன தான் இது நமக்கு மிகவும் பயனுள்ள தொழில்நுட்பமாக இருந்தாலும், உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் என்பது தெரியுமா? குறிப்பாக தூக்கமின்மை, குழந்தைகளின் வளர்ச்சியில் இடையூறு, செல்களின் வளர்ச்சியில் தடை, மூளையின் செயல்பாடு குறைவது, ஏன் மலட்டுத்தன்மையைக் கூட ஏற்படுத்தும். வை-பை வெறும் கோப்புகளை அனுப்புவதற்கும், பெறுவதற்கும் மட்டும் பயன்படுவதில்லை, அதில் உள்ள கதிர்வீச்சுக்கள் நமக்குத் தெரியாமல் உடலை அழிக்கவும் செய்கிறது.

மக்கள் உண்ணும் பெரும்பாலான உணவுகளில் சர்க்கரை கலக்கப்பட்டுள்ளது. இப்படி சர்க்கரை கலக்கப்பட்ட உணவுப் பொருட்களை அதிகளவு உட்கொண்டால், இதய நோய், ஆர்த்ரிடிஸ், சிறுநீரக கற்கள், பித்தப்பை நோய்கள் போன்ற பல நோய்களுக்கு வழிவகுக்கும்.

எங்கு பார்த்தாலும் மொபைல் போனைப் போலவே லேப்டாப்பையும் வைத்து நோண்டிக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக லேப்டாப்பை மடியில் வைத்து எப்போதும் பயன்படுத்துவதால், அதிலிருந்து வெளிவரும் வெப்பமான காற்று, சரும பிரச்சனைகளை ஏற்படுத்துவதோடு, ஆண்களுக்கு விந்தணுக்களின் உற்பத்தியை குறைத்து, அதனால் சிலருக்கு மலட்டுத்தன்மையையும் ஏற்படுத்துகிறது. எனவே லேப்டாப்பைப் பயன்படுத்தும் போது கவனமாக இருங்கள். முக்கியமாக மடியில் வைத்துப் பயன்படுத்துவதைத் தவிர்த்திடுங்கள்.

துணியில் உள்ள அழுக்குகளைப் போக்க பயன்படுத்தும் டிடர்ஜெண்ட், உங்களுக்கு தெரியாமலேயே மறைமுகமாக உங்கள் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்பது தெரியுமா? ஆம், சில டிடர்ஜெண்ட்டுகள் துணியை சுத்தம் செய்வதாக பொய்த்தோற்றத்தை உருவாக்கும். இப்படி பொய்த்தோற்றத்தை உருவாக்கும் டிடர்ஜெண்ட்டுகளில் உள்ள நச்சுமிக்க கெமிக்கல்கள், ஆண்களுக்கு மலட்டுத்தன்மையையும், கடுமையான கண்கள், சருமத்தில் அலர்ஜியையும் ஏற்படுத்தும்.

ஆல்கஹாலை அளவாக குடித்தால் நன்மையைப் பெறலாம். அதையே அளவுக்கு அதிகமாக குடித்தால், தீவிரமான பக்கவிளைவுகளான கல்லீரல், உயர் இரத்த அழுத்தம், உடல் பருமன் மற்றும் இதர பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். நீங்கள் அடிக்கடி ஆல்கஹால் குடிக்காமல் என்றாவது ஒருநாள் குடிக்கும் போது, ஒரே கல்ப் அடிப்பவராயின் அதனாலும், உடல் வேகமாக பாதிக்கப்பட்டு, அதன் காரணமாக இறப்பை சந்திக்கக்கூடும். ஏனெனில் ஆல்கஹால் ஏராளமான அளவில் டாக்ஸின்கள் உள்ளது. இதனை வேகமாக குடிக்கும் போது, இரத்தத்தில் டாக்ஸின்களின் அளவு ஒரே நேரத்தில் அதிகரிக்கும். இதன் காரணமாக குழப்பமான மனநிலை, மேலோட்டமாக சுவாசித்தல் மற்றும் இறப்பு அல்லது கோமாவிற்கு கூட செல்லக்கூடும்.