Home » » நாம் தினசரி சாப்பிடும் உணவில் உள்ள இரசாயனங்கள் பல விதமான நோய்களை உண்டாகுகின்றன...!

நாம் தினசரி சாப்பிடும் உணவில் உள்ள இரசாயனங்கள் பல விதமான நோய்களை உண்டாகுகின்றன...!



கடந்த சில மாதங்களுக்கு முன்பு எங்கு பார்த்தாலும் மேகி, மேகி, மேகி.... தான். டெல்லி, உத்திரப்பிரதேசம், கேரளா மற்றும் நேற்று முதல் தமிழகத்திலும் மேகி தடை செய்யப்பட்டது. மேகியில் மட்டும் தான் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் உட்பொருட்கள் உள்ளதாக நினைக்கிறீர்களா? அப்படி நினைத்தால் அது முற்றிலும் தவறு.

நாம் தினமும் ருசித்து சாப்பிடும் பலவகை சிப்ஸ்களில் இருந்து, மாட்டினை போல நாம் அசைப் போட்டுக் கொண்டிருக்கும் சூயிங் கம் வரை அனைத்திலும் நமது உடலிற்கு கேடு விளைவிக்கும் மூலப் பொருட்களும், தீய இரசாயனங்களும் இடம்பெற்று இருக்கின்றன.

இவ்வாறு கலக்கப்படும் இரசாயனங்களினால் நமது உடலுக்கு சிறுநீரக செயல்திறன் குறைபாடு, பசியின்மை, ஆண்மையில் குறைபாடு, புற்றுநோய் கட்டிகள் உருவாகும் வாய்ப்புகள் என பல அபாயங்கள் ஏற்படும் வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால், இதை எல்லாம் ஏன் இதுவரை யாரும் பரிசோதிக்கவில்லை, அல்ல பரிசோதித்து தான் விற்கப்படுகின்றனவா? என்பதெல்லாம் கேள்விக்குறியாகவே இருக்கின்றன...

மோனோசோடியம் குளுட்டோமேட் என்று கூறப்படும் MSG, நாம் தினசரி பயன்படுத்தும் 40க்கும் மேற்பட்ட சராசரி உணவுப் பொருட்களில் சேர்க்கப்படுகிறது. அதிகப்படியான மோனோசோடியம் குளுட்டோமேட் நரம்பு மண்டலத்தையும், அதன் செல்களையும் வெகுவாக சேதமடைய செய்யும். இது, நீங்கள் பருகும் டயட் பானங்கள், ஃபாஸ்ட் ஃபுட், இன்ஸ்டன்ட் சூப், மற்றும் பேக்கேஜ் செய்யப்பட்ட காய்கறி உணவுகளிலும் சேர்க்கப்படுகிறது. மேகி தடை செய்யப்பட்டதற்கு இது தான் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

பி.எச்.எ மற்றும் பி.எச்.டி ஆன்டி-ஆக்சிடன்ட்ஸ் பொதுவாக உடலுக்கு நன்மை விளைவிப்பது. ஆனால், பி.எச்.எ மற்றும் பி.எச்.டி போன்றவை பதப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படுகிறதாம். சூயிங் கம், உருளைக்கிழங்கு சிப்ஸ் போன்ற உணவுப் பொருட்களில் இது சேர்க்கப்படுகிறது. இது பசியின்மை, சிறுநீரக செய்திறன் குறைபாடு, முடி கொட்டுதல், புற்றுநோய், கருவின் வலுக் குறைதல் போன்ற பிரச்சனைகள் அதிகரிக்கும்.

உணவுன் நிறத்திற்காக பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் தான் இந்த சோடியம் நைட்ரேட் மற்றும் சோடியம் நைட்ரைட். இவை, இறைச்சி, ஹாட் டாக்ஸ், மற்றும் பன்றி இறைச்சி போன்றவற்றில் சேர்க்கப்படுகிறது. இது, வயிற்றில் உருவாகும் அமிலங்களோடு கலக்கும் போது, நைற்றசமைன்களை உருவாக்குகிறது. இதனால், வயிறு, மூளை, உணவுக்குழாய் பாதிப்பு மற்றும் சிறுநீர்ப்பை புற்றுநோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.

பிரெட் உணவுகளில் சேர்க்கப்படும் இரசாயனம் தான் இந்த பொட்டாசியம் ப்ரோமேட், பிரெட் அளவை அதிகரிக்கஇது பயன்படுத்தப்படுகிறது. அமெரிக்கா மற்றும் ஜப்பான் நாடுகளில் இது தடைசெய்யப்பட்டிருக்கிறது. ஆய்வுக்கூடத்தில் விலங்குகளில் பரிசோதனை செய்து போது, இது புற்றுநோய் உண்டாகக் காரணமாக இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

நாம் சாப்பிடும் பல்வேறு உணவுகளில் கவர்ச்சிக்காகவும், ஈர்ப்புக்காகவும் செயற்கை வண்ணங்கள் சேர்க்கப்படுகின்றன. சாக்லேட், கேக், ஐஸ் கிரீம் போன்ற அனைத்து உணவுகளிலும் இந்த செயற்கை வண்ணங்கள் சேர்க்கப்படுகின்றன. இதனால் குரோமோசோம் பிரச்சனைகளும், தைராய்டு கட்டிகளும் ஏற்படும் அபாயம் இருக்கின்றது.