Home » » ஜியோ சிம் எங்கு கிடைக்கும்.. எந்தெந்த போன் வைத்திருந்தால் பெற முடியும்? முழு விவரம் இதோ

ஜியோ சிம் எங்கு கிடைக்கும்.. எந்தெந்த போன் வைத்திருந்தால் பெற முடியும்? முழு விவரம் இதோ


பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிலையன்ஸ் ஜியோ சேவை வரும் 5ம் தேதி முதல் தொடங்க உள்ளதாக அந்த நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி மும்பையில் இன்று தெரிவித்தார். டிசம்பர் இறுதிவரை, அழைப்புகள் அனைத்தும் இலவசம் என்றும் இணையதள சேவைக்கான கட்டணம், உலகிலேயே மிகவும் குறைவு என்றும் முகேஷ் அம்பானி தெரிவித்தார். வெல்கம் ஃஆபர் என்ற பெயரில் ஜியோ தரும் சலுகை செப்.5 முதல் டிச.31வரை அமலில் இருக்கும். அக்காலகட்டத்தில் அனைத்து சேவைகளுமே இலவசம்தான்.

பின்னர், ஜியோ 4G டேட்டா ரூ.149 (28 நாட்களுக்கு) என்ற விலையில் தொடங்குகிறது. 300 எம்.பிக்கள் வழங்கப்படும். மாதம் ரூ. 499 என்ற திட்டத்தில் இணைந்தால் ஒரு 28 நாட்களுக்கு 1 ஜிபி டேட்டா வழங்கப்படுவதோடு, இரவு நேரத்தில் அளவில்லாத அளவுக்கு 4ஜி டேட்டாவை பயன்படுத்த முடியும். முதலில் இந்த வகை சிம்கள், ரிலையன்ஸ் ஊழியர்களுக்கு சோதனை முறையில் கொடுக்கப்பட்டது. அவர்கள் உபயோகித்து பார்த்துள்ள நிலையில், 4ஜி வசதியுள்ள சாம்சங் மற்றும் எல்ஜி ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்தும் அனைத்து வாடிக்கை யாளர்களுக்கும் ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவையை இலவசமாக அளிக்க இருப்பதாக அந்த நிறுவனம் அறிவித்திருந்தது. முன்னோட்ட சலுகை இதற்கு முன்னோட்ட சலுகை (Preview) என பெயரிடப்பட்டது. இந்த சலுகையை அனைத்து ரிலையன்ஸ் டிஜிட்டல் கடைகளுக்கு சென்று பயன்படுத்திக் கொள்ள முடியும். வாடிக்கையாளர்கள் தங்களது விவரங்களை அளித்துவிட்டு ஜியோ சிம் கார்டை இந்த கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என்று ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், சாம்சங் மற்றும் எல்ஜி மட்டுமல்ல, சோனி, ஹெச்டிசி உள்ளிட்ட மேலும் பல 4ஜி வசதி கொண்ட போன்களுக்கும் இந்த சலுகையை நீட்டித்துள்ளது ரிலையன்ஸ். இந்தச் சலுகையின் மூலம் வாடிக்கையாளர்கள், ஆடியோ மற்றும் ஹெச்டி வீடியோ கால், எஸ்எம்எஸ் வசதி, அளவில்லாத இண்டர்நெட் வசதி ஆகியவற்றை இலவசமாக டிசம்பர் 31ம் தேதிவரை பயன்படுத்திக் கொள்ள முடியும். ரிலையன்ஸ் டிஜிட்டல், டிஜிட்டல் எக்ஸ்பிரஸ் மினி ஸ்டோர்களில் சிம்கார்டுகள் கிடைக்கின்றனவாம். 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்கள், இருப்பிட விவரம், போட்டோ அடங்கிய ஏதாவது ஒரு அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை (ஆதார், வாக்காளர் அடையாள அட்டை போன்றவை) ஜெராக்சை சமர்ப்பித்து, உங்கள் 4ஜி வசதி கொண்ட போனையும் காண்பித்து, சிம்கார்டை பெற்று பயன்பெறலாமாம். இருப்பினும், இந்த ஸ்டோர்களில் பணியாற்றுபவர்களுக்கே இன்னும் சரியாக விவரம் சென்று சேரவில்லை என்பதால், அந்த ஸ்டோர்களுக்கு போன் செய்து விவரம் கேட்டுக்கொண்டு செல்லவும். ஜியோ சேவை கிடைக்கும் செல்போன் பட்டியல் இதோ:

ஹெச்டிசி ஸ்மார்ட் போன்கள்: Desire 626 dual Sim, Desire 628, Desire 630, Desire 728 Dual SIM, Desire 820, Desire 820Q, Desire 820S Dual Sim, Desire 825, Desire 826, Desire 826 DS, Desire 828 DS, Desire 830, Desire Eye, HTC 10, HTC 10 Life style, One A9, One E9 S dual sim, One E9+ Dual Sim, One M8, One M8 Eye, One M9 Plus, One M9e, One ME Dual Sim, One X9

சோனி ஸ்மார்ட் போன்கள்: Xperia X A, Xperia X A Ultra, Xperia X(F5122), Xperia Z5 Dual(E6883), Xperia Z5 Premium Dual

விவோ ஸ்மார்ட் போன்கள்: vivo V3, vivo V3Max, vivo Y21L, vivo Y51L

இன்டெக்ஸ் ஸ்மார்ட் போன்கள்: Aqua 4G, Aqua 4G Star, Aqua 4G Strong, Aqua 4G+, Aqua Ace, Aqua Ace 2, Aqua Ace Mini, Aqua Craze, Aqua Eco 4G, Aqua GenX, Aqua Music, Aqua Power 4G, Aqua Raze, Aqua S7, Aqua Secure, Aqua Shine 4G, Aqua Strong 5.1, Aqua Super, Aqua Trend, Aqua Turbo 4G, Aqua View, Aqua Wing, Cloud 4G Smart, Cloud 4G Star, Cloud Crystal 2.5D, Cloud Fame 4G, Cloud Flash, Cloud Glory 4G, Cloud Jewel, Cloud String HD, Cloud String V2.0, Cloud Swift

வீடியோகான் ஸ்மார்ட் போன்கள்: Graphite1 V45ED, Krypton 3 V50JG, Q1, V50FA3, V50FG6

சான்சுயி ஸ்மார்ட் போன்கள்: S50 FD45S

சாம்சங் ஸ்மார்ட் போன்கள்: Grand Prime 4G, Galaxy J1, Galaxy J2, Galaxy J7, Galaxy J5, Galaxy S5 Plus, Galaxy A5, Galaxy A7, Galaxy Core Prime 4G, Galaxy S6, Galaxy J3 (2016), ON7, Galaxy A8, Galaxy S6 Edge, ON5, Galaxy Note 5, Galaxy Note 4, Galaxy Alpha, Galaxy S6 Edge Plus, Galaxy Note 4 Edge, Galaxy Note 5 Duos, Galaxy S5 Neo, S7, Galaxy A5 (2016), Galaxy A7 (2016), S7 Edge, A8 VE, J5 (2016), J7 (2016), ON5 Pro, ON7 Pro, Galaxy J2 (2016), J Max, Galaxy A9, Galaxy A9 Pro, Galaxy C5, Galaxy C7, Galaxy J2 Pro, Galaxy Note 7. எல்ஜி ஸ்மார்ட் போன்கள் K332 (K7 LTE), K520DY (Stylus 2), K520DY, H860 (LG G5), K500I (X Screen), K535D (Stylus 2 Plus), LGH630D (G4 Stylus 4G) & LGH 442 (LGC70 Spirit LTE)

மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட் போன்கள்: Bolt Selfie, Canvas 5, Canvas 5 Lite, Canvas 5 Lite Special Edition, Canvas 6, Canvas 6 Pro, Canvas Amaze 4G, Canvas Blaze 4G, Canvas Blaze 4G Plus, Canvas Evok, Canvas Fire 4G, Canvas Fire 4G plus, Canvas Fire 6, Canvas Juice 4G, Canvas Knight 2, Canvas Mega 2, Canvas Mega 4G, Canvas Nitro 4G, Canvas Pace 4G, Canvas Play 4G, Canvas Pulse 4G, Canvas Sliver 5, Canvas Tab, Canvas Unite 4, Canvas Xpress 4G, Unite 4 Plus, Unite 4 Pro

யு போன்கள்: Yu Yureka, Yu Yutopia, YU Note, Yu Yuphoria, Yunicorn, Yunique, Yuphoria, Yureka Plus, Yureka S

ஆஸஸ் போன்கள்: ZenFone 2 Laser (ZE550KL), Zenfone 2 (ZE551ML), Zenfone Max (ZC550KL), Zenfone 2 Laser 5.0 (ZE500KL), Zenfone 2 (ZE550ML), Zenfone Selfie( ZD551KL), Zenfone 2 Laser (ZE601KL), Zenfone Zoom(ZX551ML), Zenfone Go 5.0 LTE (T500), Zenfone 3 ZE552KL, Zenfone 3 Laser( ZC551KL), Zenfone 3( ZE520KL), Zenfone 3( ZS570KL), Zenfone 3( ZU680KL)

ஜியோனி போன்கள்: E8, F103 Pro, F103(1GB), F103(2GB), F103(3GB), M4, M5, M5 Lite, M5 Lite CDMA, M5 Plus, P5L, S Plus, S6, S6s, S7, V6L

கார்பன் போன்கள்: Aura 1, Aura Power, Quattro L45 IPS, Quattro L50 HD, Quattro L51 HD, Quattro L52 VR, Quattro L55 HD

லாவா போன்கள்: A71, A72, A76, A76 Plus, A88, A89, A97, Ivory s 4g, Lava V5 M, Pixel V2, V2s, X10, X11, X12, X17, X28, X38, X41, X41 Plus, X46, X50, X50 Plus, X81

ஜைலோ போன்கள்: Black-1X M, era 1X, era 2X, era 4G, era 4K, era X

பேனசோனிக் போன்கள்: ELUGA L, ELUGA Switch, ELUGA Icon, T45, ELUGA I2 ( 1GB ), ELUGA L2, ELUGA Mark, ELUGA Turbo, ELUGA Arc, ELUGA I2 2GB, ELUGA I2 3GB, ELUGA I3, ELUGA Icon 2, ELUGA A2, ELUGA Note, P55 Novo 4G, ELUGA
Arc 2, P77

டிசிஎல் போன்கள்: FIT 5.5, Pride T500L, TCL 560, TCL 562

அல்கடேல் போன்கள்: OneTouch X1, Pixi 4 -5, POP Star, POP3, POP4